இலகுன மனசெல்லாம் வேண்டாம்... பிக்பாஸ் - 8 முன்னோட்டம்!

இணையத்தில் வைரலாகும் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியின் முன்னோட்டக் காட்சி.
இலகுன மனசெல்லாம் வேண்டாம்...  பிக்பாஸ் - 8 முன்னோட்டம்!
Published on
Updated on
1 min read

பிக்பாஸ் 8 நிகழ்ச்சியின் முன்னோட்டக் காட்சி(ப்ரோமோ) வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. கடந்த 7 சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

ஆனால், சில மாதங்களுக்கு முன் பிக்பாஸ் - 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவதில்லை என அவர் அறிவித்ததைத் தொடர்ந்து, அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபலம் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது.

பிக்பாஸ் - 8 சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளதாக முன்னதாக அறிவிப்பு வெளியாகி, அதற்கான டீசரும் வெளியாகியிருந்தது.

இலகுன மனசெல்லாம் வேண்டாம்...  பிக்பாஸ் - 8 முன்னோட்டம்!
உடற்பயிற்சி, படப்பிடிப்பு, சிகிச்சை...! சமந்தாவின் ஒருநாள் நிகழ்ச்சி நிரல்!

இந்நிலையில், இதுவரை எந்த சீசன்களில் இல்லாத வகையில் பிக் பாஸ் - 8 நிகழ்ச்சியின் முன்னோட்டக் காட்சி(ப்ரோமோ) மக்களால் வெளியிடப்படும் என்று தொலைக்காட்சி நிர்வாகம் முன்னதாக அறிவித்து இருந்தது.

அதன்படி,விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ள பிக்பாஸ் - 8 நிகழ்ச்சியின் ப்ரோமோ சென்னை பெசன்ட் நகரில் மக்களலால் வெளியிடப்பட்டு, இணையத்தில் வைரலாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசன்களில் பிக்பாஸ் ஐ(கண்) லோகோ ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும். இந்த சீசனுக்கான பிக்பாஸ் ஐ லோகோவும் முன்னோட்டக் காட்சியில் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X