ஹரியாணா தேர்தல்: 4-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்!

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று (செப்டம்பர் 12) காங்கிரஸ் கட்சி நான்காவது கட்டமாக 5 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ்
காங்கிரஸ்
Published on
Updated on
2 min read

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று (செப்டம்பர் 12) காங்கிரஸ் கட்சியி் நான்காவது கட்டமாக 5 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் நான்கு தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வேண்டும்.

நான்காவது கட்ட வேட்பாளர்கள் பட்டியலின்படி, பரிமல் பாரி அம்பாலா கண்டோன்மென்ட் தொகுதியிலும், சச்சின் குண்டு பானிபட் தொகுதியிலும், சத்பீர் துப்லைன் நர்வானாவிலும், ரானியா மற்றும் ரோஹித் நகரில் சர்வ மித்ரா கம்போஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

முன்னதாக, புதன்கிழமை மூன்றாவது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. மூன்றாவது பட்டியலில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் சந்தர் மோகன் பஞ்சகுலா தொகுதியிலும், நிர்மல் சிங் அம்பாலாவிலும், பூஜா சவுத்ரி மவுலானாவிலும், அக்ரம் கான் ஜகத்ரியிலும், ராகுல் மக்கர் ஹன்சியிலும்,

மனிஷா சங்வான் தாத்ரி தொகுதியிலும், ஜகதீஷ் யாதவ் கோஸ்லி தொகுதியிலும் மற்றும் லக்கன் குமார் சிங்லா பரிதாபாத் தொகுதியிலும், அசோக் அரோரா தானேசரிலும் , குல்தீப் சர்மா கனாவுரிலும், பிரிஜேந்திர சிங் உச்சனா கலான் தொகுதியிலும், பரம்வீர் சிங் தோஹானா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். அனிருத் சவுத்ரி தோஷம் தொகுதியிலும், மேஹாமில் பல்ராம் டாங்கி, மஞ்சு சௌத்ரி நங்கல் சவுத்ரியிலும், வர்தன் யாதவ் பாட்ஷாபூர் தொகுதியிலும் மற்றும் மோஹித் குரோவர் குருகிராம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

முன்னதாக, காங்கிரஸ் எம்பி தீபேந்தர் ஹூடா மற்றும் கட்சியின் மாநில தலைவர்கள் முன்னிலையில் ஜூலானா சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் மல்யுத்த வீரரும், காங்கிரஸ் வேட்பாளருமான வினேஷ் போகத் வேட்புமனு தாக்கல் செய்தார்.

காங்கிரஸ்
கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் ரூ. 500 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம்: தமிழக அரசு

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நான் அரசியலுக்கு வந்தது எனது அதிர்ஷ்டம். ஒவ்வொரு பிரிவினரின் நலனுக்காகவும் நாங்கள் கடுமையாக உழைப்போம். ஜூலானா மக்கள் என் மீது செலுத்தும் அன்பிற்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்" என்று போகாத் கூறினார்.

கடந்த 6 ஆம் தேதி ஒலிம்பிக் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுடன் சேர்ந்து காங்கிரஸில் சேர்ந்தார்.இவர்கள் ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸில் இணைந்தது கட்சிக்கு பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது.

90 உறுப்பினா்களைக் கொண்ட ஹரியாணா சட்டப் பேரவைக்கு அக்டோபா் 5-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. ஆளும் பாஜக, முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஜனநாயக ஜனதா கட்சி, இந்திய தேசிய லோக் தளம் என பலமுனைப் போட்டி நிலவுகிறது.

ஹரியாணாவில் தோ்தல் கூட்டணி பேச்சுவாா்த்தை தோல்வியடைந்ததையடுத்து, காங்கிரஸ், ஆம் ஆத்மி தனித்து போட்டியிடுகின்றன.

வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 8-ஆம் தேதி நடைபெறுகிறது.

2019 ஆம் ஆண்டு ஹரியாணா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 46 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com