

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெள்ளிக்கிழமை வினாடிக்கு 11,631 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் லேசன மழை பெய்து வருவதால் வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,619 கன அடியிலிருந்து வினாடிக்கு 11,631 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 23,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 113.12 அடியிலிருந்து 112.39 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 81.85 டிஎம்சியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.