தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு சனிக்கிழமை நீர் வரத்து வினாடிக்கு 13,217 கன அடியாக அதிகரித்துள்ளது.

News image
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 13,217 கன அடியாக அதிகரித்துள்ளது.
Updated On :14 செப்டம்பர் 2024, 3:35 am

DIN

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு சனிக்கிழமை நீர் வரத்து வினாடிக்கு 13,217 கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் சனிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 11,631 கன அடியிலிருந்து வினாடிக்கு 13,217 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 23,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கனவீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 112.39 அடியிலிருந்து 111.75 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 80.92 டிஎம்சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.