தூத்துக்குடி துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தூத்துக்குடி துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

தூத்துக்குடி: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தூத்துக்குடி துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

வடகிழக்கு வங்கக் கடல் மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது, தொடர்ந்து மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, படுகாலி அருகே வங்கதேச கடற்கரையை கடக்கக் கூடும் எனவும் இதனால் தமிழகக் கடலோர மாவட்டங்களில் மழையுடன், பலத்த கடற்காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

கோப்புப்படம்
அமெரிக்கா பயணம் சாதனைப் பயணமாக அமைந்தது: முதல்வர் மு.க.ஸ்டாலின் !

இதுதொடர்பாக மீனவா்கள், கப்பல்களுக்கு தெரிவிக்கும் வகையில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டது. மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com