
வேட்டையன் படத்தில் நடிகை ரித்திகா சிங் பாத்திரத்தை அறிமுகம் செய்யும்விதமாக படக்குழு விடியோ வெளியிட்டுள்ளது.
ஜெய்பீம் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் வருகிற அக்டோபர் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்டையன் படத்தின் முதல் பாடல் ‘மனசிலாயோ’ சில நாள்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், வேட்டையன் படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்களை இன்றுமுதல் அறிமுகம் செய்வதாக தெரிவித்திருந்த படக்குழு, தற்போது நடிகை ரித்திகா சிங் பாத்திரத்தை அறிமுகம் செய்துள்ளது. இப்படத்தில் ரித்திகா சிங் ரூபா என்கிற பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி வருகின்ற செப். 20 அன்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.