மதுரையில் பினராயி விஜயன்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய மாநாடு தொடங்கியது!

மார்க். கம்யூனிஸ்ட் அகில இந்திய மாநாடு தொடங்கியது..
பினராயி விஜயனுக்கு பொன்னாடை போர்த்திய மாநில செயலர் பெ.சண்முகம், அருகில் சு.வெங்கடேசன் எம்.பி
பினராயி விஜயனுக்கு பொன்னாடை போர்த்திய மாநில செயலர் பெ.சண்முகம், அருகில் சு.வெங்கடேசன் எம்.பி
Published on
Updated on
1 min read

மதுரையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு இன்று தொடங்கியது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு மதுரையில் இன்று முதல் வரும் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாடு மதுரையில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை சிபிஎம் மூத்த தலைவர் பிமன் பாசு கொடியேற்றி மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.

இந்த மாநாட்டில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பிரகாஷ் காரத், கேரள முதல்வரும், அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் மதுரைக்கு வருகை தந்து மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் மாநாட்டு உரை நிகழ்த்துகிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடகா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வருவாய்த் துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கௌடா, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மற்றும் தேசிய, மாநில நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி தலைவர்கள் பேசுகிறார்கள்.

வரும் ஞாயிற்றுக்கிழமை வரை பல்வேறு நிகழ்ச்சிகள், தீர்மானங்கள் நிறைவேற்றும் நிகழ்வுகளும் நடக்க இருக்கின்றன. மாநாட்டில் பங்கேற்பதற்காக, நாடு முழுவதும் இருந்து மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் மதுரையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com