
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள அயன் சிங்கம்பட்டி குடியிருப்பு பகுதிகளில் மீண்டும் கரடி நடமாட்டத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு கல்லிடைக்குறிச்சி நெசவாளர் காலனி, பொன்மா நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.
இந்த நிலையில், தற்போது மீண்டும் அயன் சிங்கம்பட்டி பகுதியில் கரடி குடியிருப்புகளில் வலம் வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே வனத் துறை அதிகாரிகள் விரைந்து கண்காணிப்புகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.