
மேற்கு வங்கத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துவுள்ளதாகக்கூறி 2024-ம் ஆண்டு சுமார் 25,753 ஆசிரியர்கள் மற்றும் கல்விப் பணியாளர்களை கொல்கத்தா உயர் நீதிமன்றம் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டபோது கொல்கத்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அங்கு உறுதி செய்யப்பட்டது.
இந்தத் தீர்ப்பினால் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுடன் ஈடுபடாத ஆசிரியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கொல்கத்தாவின் சால்ட் லேக் பகுதியில் இன்று (ஏப்.10) தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இந்தப் போராட்டத்தில் நேற்று (ஏப்.9) தெற்கு கொல்கத்தாவில் மேற்கு வங்க பள்ளிக்கல்வி ஆணையத்தின் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதற்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட்டுத் தீர்வுக் காண வேண்டி கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.