மயிலம் முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம்: திரளானப் பக்தர்கள் பங்கேற்பு

ஸ்ரீவள்ளி, தெய்வானை உடனுறை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி உத்திரத் தேரோட்டம் வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
மயிலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற முருகன் கோயில் பங்குனி உத்திரத் தேரோட்டம்.
மயிலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற முருகன் கோயில் பங்குனி உத்திரத் தேரோட்டம்.
Published on
Updated on
1 min read

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மயிலம் பொம்மபுர ஆதீன திருமடத்தில் அமைந்துள்ள ஸ்ரீவள்ளி, தெய்வானை உடனுறை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி உத்திரத் தேரோட்டம் வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த திரளானப் பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்தனர்.

திருக்கயிலான பரம்பரை பொம்மபுரஆதீனம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் திருமடத்தில் அமைந்துள்ள ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வள்ளி, தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். ஆன்மிகச் சிறப்புகளைக் கொண்ட இந்தக் கோயிலில் நிகழாண்டு பங்குனி உத்திரப் பெருவிழா ஏப்ரல் 2 ஆம் தேதி கொடியேற்றறத்துடன் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து நாள்தோறும் கோயிலில் சிறப்பு வழிபாடுகளும், அபிஷேகம், ஆராதனைகளும் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலாவும் நடைபெற்று வந்தன .

பங்குனி உத்தர பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

மயிலம் முருகன் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா தேரோட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சரும், செஞ்சி எம்எல்ஏ கே. எஸ். மஸ்தான் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள்.
மயிலம் முருகன் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா தேரோட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சரும், செஞ்சி எம்எல்ஏ கே. எஸ். மஸ்தான் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள்.

முன்னதாக, சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை உடனுறை ஸ்ரீசுப்பிரமணியா் திருத்தேரில் எழுந்தருளியதைத் தொடா்ந்து, தேரோட்டம் தொடங்கியது.

மயிலம் ஸ்ரீபொம்மபுர ஆதீனம் 20 ஆம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் சிறப்பு பூஜைகளை செய்வித்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தார். காலை சுமார் 5.46 மணிக்கு தொடங்கிய தேரோட்டமானது மயிலம் மலையை சுற்றி வலம் வந்து 7 மணிக்கு நிலையை வந்தடைந்தது.

இதில் முன்னாள் அமைச்சரும், செஞ்சி எம்எல்ஏ கே. எஸ். மஸ்தான் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் தமிழகம், புதுச்சேரி மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று அரோகரா முழக்கத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேரோட்டத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மயிலத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. விழுப்புரம் எஸ்.பி ப.சரவணன் உத்தரவின்பேரில் போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com