கோப்புப் படம்
கோப்புப் படம்

பாகிஸ்தானில் நிலநடுக்கம்..! ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவு!

பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதைப் பற்றி...
Published on

பாகிஸ்தானின் ராவல்பிண்டி அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று (ஏப்.12) மதியம் 1 மணியளவில் நிகநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

ராவல்பிண்டி நகரத்திலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் நிலப்பரப்பிலிருந்து சுமார் 10 அடி ஆழத்தில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி, ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் அட்டோக், சாக்வால் மற்றும் மியான்வாலி மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் பெஷாவர், மர்தான், மொஹ்மாந்து மற்றும் ஷாப்கதார் ஆகிய நகரங்களில் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருள் பாதிப்புகள் குறித்த எந்தவொரு தகவலும் தற்போது வரை வெளியிடப்படவில்லை.

முன்னதாக, பாகிஸ்தானில் கடந்த 2005-ம் ஆண்டு நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் அந்நாட்டில் 74,000-க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:ராணுவப் புரட்சிக்கு பின் முதல் முறையாக தேர்தலைச் சந்திக்கும் ஆப்பிரிக்க நாடு!

X
Dinamani
www.dinamani.com