
மகாராஷ்டிரத்தின் மலைக்கோயிலில் தேனீக்கள் தாக்கியதில் ஏராளமான பக்தர்கள் காயமடைந்துள்ளனர்.
நாசிக் மாவட்டத்தின் ஆஞ்சனேரி மலையிலுள்ள கோயிலில் ஹனுமான் ஜெயந்தியை முன்னிட்டு இன்று (ஏப்.12) ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்வதற்காகத் திரண்டிருந்தனர்.
அப்போது, காலை 7.30 மணியளவில் திடீரென அங்கு கூடியிருந்தவர்களை தேனீக்கள் கூட்டமாகத் கொட்டியதில் ஏராளமானோர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து, உடனடியாக அங்கிருந்த காவல் மற்றும் வனத்துறையினர் அந்த தேனீக்களை விரட்டி சூழலைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதில், காயமடைந்த பக்தர்களின் உயிருக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை எனவும் அவர்கள் அனைவருக்கும் தற்போது சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆஞ்சனேரி மலையானது நாசிக் மாவட்டத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஆஞ்சனேயரின் பிறப்பிடமாகக் கருதப்படும் இந்தப் பகுதியில் அமைந்துள்ள கோயிலில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்வது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:தூசு புயல்! 200 விமானங்கள் தாமதம், தில்லி விமான நிலையத்தில் பயணிகள் அவதி!