
உக்ரைன் சுமி நகரத்தின் மீது ரஷியா குண்டு வீச்சு: 32 பேர் பலி, 84 பேர் காயம்
உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைக் குண்டுகளை வீசித் தாக்கியதில் இரண்டு குழந்தைகள் உள்பட 32 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 84 பேர் காயமடைந்தனர்.
வடக்கு உக்ரைனில் உள்ள சுமி நகரின் மையப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ரஷியா ஏவுகணைக் குண்டுகளை வீசித் தாக்கியது. இதில், இரண்டு குழந்தைகள் உள்பட 32 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பத்து குழந்தைகள் உள்பட 84 பேர் காயமடைந்தனர்.
ஆந்திரம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் பலி: பிரதமர் நிவாரணம் அறிவிப்பு
பலர் தேவாலய வழிபாட்டில் கலந்துகொண்டிருந்தபோதும், தெருக்களில் நெரிசல் அதிகமாக இருந்த நேரத்தில் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசிப்பட்டதாகவும், இது 2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு உக்ரைனிய மக்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரஷியா குண்டுகளை வீசி அப்பாவி மக்களை கொன்று குவிப்பதாக தெரிவித்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, இந்த தாக்குதலை ஒரு பயங்கரவாதச் செயல் என்றார்.
கிரிவி ரிஹ் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்ட சில நாள்களுக்குப் பிறகு இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.