நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்புவின் எக்ஸ் தளப் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
"என்னுடைய எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. என்னால் கணக்கில் உள்நுழைய(login) முடியவில்லை. கடந்த 9 மணி நேரத்தில் எக்ஸ் பக்கத்தில் நான் எந்த பதிவும் பதிவிடவில்லை. இதைச் சரிசெய்ய முயற்சித்து வருகிறேன். எனது எக்ஸ் பக்கத்தில் ஏதேனும் பதிவுகள் வந்தால் தெரிவிக்கவும்" என்று பதிவிட்டுள்ளார்.
தனது எக்ஸ் கணக்கில் ஹேக்கர்கள் மின்னஞ்சல் முகவரியை மாற்றியுள்ளதாகவும் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளதாகவும் கூறியுள்ள குஷ்பு, எக்ஸ் பக்கத்தை மீட்கும் முயற்சியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.