ஏசி புறநகர் மின்சார ரயில் சேவை: பயணிகள் கருத்து தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண் அறிவிப்பு

குளிர்சாதன புறநகர் மின்சார ரயில் சேவைகளை எந்தெந்த நேரங்களில் இயக்க வேண்டும் என்பதை பயணிகள் தெரிவிக்கலாம் என வாட்ஸ்ஆப் எண் அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே.
ஏசி புறநகர் மின்சார ரயில் சேவை குறித்து பயணிகள் வாட்ஸ்ஆப் எண்ணில் கருத்து தெரிவிக்கலாம்.
ஏசி புறநகர் மின்சார ரயில் சேவை குறித்து பயணிகள் வாட்ஸ்ஆப் எண்ணில் கருத்து தெரிவிக்கலாம்.
Updated on
1 min read

சென்னை: சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே குளிர்சாதன(ஏசி) வசதி கொண்ட புறநகர் மின்சார ரயில் ரயில் சேவை சனிக்கிழமை தொடங்கிய நிலையில், குளிர்சாதன புறநகர் மின்சார ரயில் சேவைகளை எந்தெந்த நேரங்களில் இயக்க வேண்டும் என்பதை பயணிகள் தெரிவிக்கலாம் என வாட்ஸ்ஆப் எண் அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே.

இது குறித்து தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே பயணிக்கும் பணியாளா்கள், மாணவா்களின் வசதிக்காக புதிய குளிர்சாதன(ஏசி) மின்சார ரயில் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. இந்த ரயில் பயணிகள் அதிகம் பயணிக்கும் காலை மற்றும் மாலை நேரங்கள் மொத்தமாக 6 சேவைகள் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில், ரயிலின் நேரம் மற்றும் இயக்கம் குறித்து பயணிகள் 63747 13251 எனும் ‘வாட்ஸ்ஆப்’ எண்ணில் தெரிவிக்கலாம். கருத்துக்களை ஒலி வடிவில் பதிவிடாமல், எழுத்து வடிவில் மட்டும் பதிவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com