கொன்னையம்பட்டியில் ஜல்லிக்கட்டு

கொன்னையம்பட்டி அக்காண்டி அம்மன் கோயில் பங்குனித்திரு விழாவையொட்டி ஜல்லிக்கட்டுப்போட்டி புதன்கிழமை நடைபெற்று வருகிறது.
கொன்னையம்பட்டி அக்காண்டி அம்மன் கோயில் பங்குனித்திரு விழாவையொட்டி நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுப்போட்டி
கொன்னையம்பட்டி அக்காண்டி அம்மன் கோயில் பங்குனித்திரு விழாவையொட்டி நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுப்போட்டி
Published on
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையம்பட்டி அக்காண்டி அம்மன் கோயில் பங்குனித்திரு விழாவையொட்டி ஜல்லிக்கட்டுப்போட்டி புதன்கிழமை நடைபெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டிப் போட்டியை இலுப்பூர் வருவாய்க் கோட்டாட்சியர் அ.அக்பர்அலி தொடங்கி வைத்தார்.

போட்டியின் தொடக்கமாக கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து திருச்சி, சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800-க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்து வருகின்றன.

வாடிவாசலிருந்து சீறிப் பாய்ந்து வரும் காளைகளை 220 மாடு பிடி வீரர்கள் தீரத்துடன் காளையை அடக்க முற்பட்டு வருகின்றனர்.

போட்டியில் வெற்றிபெறும் ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்களுக்கும், வீரா்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இலுப்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் முத்துராஜா தலைமையிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com