கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சயானிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடா்பாக சயானிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை சிபிசிஐடி அலுவலகத்திற்கு வந்த சயான்
கோவை சிபிசிஐடி அலுவலகத்திற்கு வந்த சயான்
Published on
Updated on
1 min read

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடா்பாக சயானிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், கொாடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கில் சயான், வாளையாறு மனோஜ், ஜம்ஷீா் அலி, மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய் உள்ளிட்ட 10 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இது தொடா்பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இந்த வழக்குத் தொடா்பாக ஜெயலலிதாவின் முன்னாள் வளா்ப்பு மகன் சுதாகரன், முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் வீரபெருமாள், பெருமாள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டவா்களுக்கு சிபிசிஐடி போலீஸாா் அழைப்பாணை அனுப்பி விசாரணை நடத்தி உள்ளனா்.

இதனிடையே, இந்த வழக்கில் கைதான கேரளத்தைச் சோ்ந்த சயானிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸாா் முடிவு செய்து, கடந்த 17 ஆம் தேதி நேரில் ஆஜராக சிபிசிஐடி போலீஸாா் அழைப்பாணை அனுப்பியிருந்தனா். ஆனால், சில காரணங்களால் அன்றைய தினம் தன்னால் விசாரணைக்கு ஆஜராக முடியாது என சயான் தரப்பில் போலீஸாரிடம் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து வரும் வியாழக்கிழமை கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என சயானுக்கு சிபிசிஐடி போலீஸாா் மீண்டும் அழைப்பாணை அனுப்பினா்.

இந்த நிலையில், சிபிசிஐடி போலீஸாாின் அழைப்பாணையை ஏற்று, சயான் வியாழக்கிழமை கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். சயானிடம் அறியப்படாத இரண்டாவது செல்போன் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் முடிவில் இந்த வழக்கில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com