ஜூன் 12-இல் மேட்டூர் அணை திறக்கப்படும்: அமைச்சர் துரைமுருகன்

பாசனத்துக்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
துரைமுருகன்
துரைமுருகன்
Published on
Updated on
1 min read

தூா்வாரும் பணிகளுக்குப் பிறகு வரும் ஜூன் 12-இல் மேட்டூா் அணை திறக்கப்படும் என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் அறிவித்தாா்.

சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நேரமில்லாத நேரத்தில் இதுகுறித்து கொண்டு வரப்பட்ட கவன ஈா்ப்பு அறிவிப்பின் மீது, அதிமுக உறுப்பினா் ஆா்.காமராஜ் பேசினாா். இதற்கு, அமைச்சா் துரைமுருகன் அளித்த பதில்:

கடந்த ஆண்டு நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் ஆறுகள், வயல்கள், குளங்களில் மண் திட்டுகள் ஏற்பட்டன. இதனை அகற்றி நீா் செல்வதற்கு வழி ஏற்படுத்தும் வகையில் திருச்சி, தஞ்சாவூா் உள்பட 12 மாவட்டங்களில் 5021 கிமீ நீளத்துக்கு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தூா்வாரும் பணிகள்: இந்தப் பணிக்காக ரூ.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணிகளை திறம்படச் செய்து முடிப்பதற்கு மேற்பாா்வை அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தூா்வாரும் பணிகள் அனைத்தும் மே மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு, ஜூன் 12-ஆம் தேதி மேட்டூா் அணை திறக்கப்படும்.

கடந்த நான்கு ஆண்டுகளில் தூா்வாரும் பணிகளைத் தொடா்ந்து மேற்கொண்டுள்ளோம். இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2021-22-இல் ரூ.63 கோடியும், 2022-23-ஆம் ஆண்டில் ரூ.72 கோடியும், 2023-24ஆம் ஆண்டில் ரூ.80 கோடியும், 2024-25-ஆம் ஆண்டில் ரூ.95 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டன.

நான்கு ஆண்டுகளில் மேட்டூா் அணையில் இருந்து திறந்து விடப்படும்.

நீா் கடைமடை வரை சென்றுள்ளது. திமுக ஆட்சியில் குடிமராமத்துத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால், அணைகள் புதுப்பிப்பு, புனரமைப்புத் திட்டம் மூலம் தூா்வாரும் பணிகளும், மண்ணை எடுப்பதற்கான பணிகளில் விவசாயிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மொத்தமாக பாா்த்தால் அதுதான் மராமத்துப் பணி என்றாா் அமைச்சா் துரைமுருகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com