திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

சோதனைகளை சாதனைகளாக மாற்றக்கூடியவர் முதல்வர் ஸ்டாலின்: கி. வீரமணி

முதல்வர் ஸ்டாலின் சோதனைகள் அனைத்தையும் சாதனைகளாக மாற்றக்கூடியவர் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.
Published on

சென்னை: உலகம் பாராட்டக்கூடிய அளவிற்கு, உலகம் அதிசயப்படக்கூடிய அளவிற்கு பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கும் நம்முடைய முதல்வர் ஸ்டாலின் சோதனைகள் அனைத்தையும் சாதனைகளாக மாற்றக்கூடியவர் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.

சென்னை பெரியமேடு ரிப்பன் மாளிகையில் வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி தியாகராயரின் 174 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கும் கீழே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட திருஉருவப்படத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

திராவிடர் இயக்கத்தை குழி தூண்டி புதைத்து விட்டோம் என்று அந்த காலத்தில் கொக்கரித்தவர்களுக்கு எல்லாம் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் அருமையாக பதில் சொன்னார்கள்.

பிறகு ஆட்சிக்கு வந்தவுடன் இந்த ஆட்சி ஏதோ புதிய ஆட்சி கிடையாது, நீதிக் கட்சி என்ற திராவிடர் இயக்கத்தின் தொடர்ச்சி என்று அண்ணா சொன்னார்.

அந்த வழியில் தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

எவ்வளவோ சோதனைகள் இருந்தாலும் கூட சோதனைகள் அனைத்தையும் தாண்டி சாதனைகளை நாள்தோறும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார்.

உலகம் பாராட்டக்கூடிய அளவிற்கு, உலகம் அதிசயப்படக்கூடிய அளவிற்கு பல்வேறு சாதனைகளை முதல்வர் ஸ்டாலின் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். யாரையெல்லாம் பாராட்ட வேண்டுமோ, திராவிடர் இயக்க வழி வந்தவர்களை அனைவரையும் இந்த அரசு நினைவு கூறுகிறது, அவர்களின் பெயரால் பல்கலைக்கழகங்களை அமைக்கிறார்கள் என்று கூறினார்.

திராவிடக் கொள்கைகள் ஆரியத்தை உறுத்துகிறது. இதனைப் பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாத சோதனைகளை நடத்துகிறார்கள். எதை நடத்தினாலும் திராவிடத்தை அசைக்க முடியாது.

மக்கள் ஆதரவு இல்லாமல் குறுக்கு வழியில் ஒரு பெரிய திட்டத்தை அமல்படுத்தலாம் என்று வியூகத்தை பயன்படுத்த நினைக்கிறார்கள். அதற்கு ஆளுநர் பயன்படுகிறார். நிதி சுமை நெருக்கடியை உருவாக்குகிறார்கள், அமைச்சர்கள் மீது எப்போதோ நடந்த செய்திகளை எல்லாம் இப்போது தூசி தட்டி எடுத்து பெரிய அளவில் ஊழல் நடந்ததாக புதிய கதைகளை எல்லாம் உருவாக்குகிறார்கள்.

எதையும் உள்வாங்கிக் கொண்டு எதிர்நீச்சல் அடிக்கக் கூடிய இயக்கம் திராவிடர் இயக்கம்.

திராவிடக் கொள்கைகள் ஆரியத்தை உறுத்துகிறது. அதனால் சோதனைகளை நடத்துகிறார்கள் எதை நடத்தினாலும் திராவிடத்தை அசைக்க முடியாது என்று வீரமணி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com