வினா - விடை வங்கி... சந்திப்பிழை

சந்திப்பிழைத் திருத்தம் தொடர்பாக....
வினா - விடை வங்கி... சந்திப்பிழை
Published on
Updated on
2 min read

சந்திப்பிழையற்ற வாக்கியங்களைக் கண்டறிக

1.

அ) மருத்துவப் படிப்பிற்கு என்னை தேர்வு செய்தனர்.

ஆ) மருத்துவ படிப்பிற்கு என்னை தேர்வு செய்தனர்.

இ) மருத்துவப் படிப்பிற்கு என்னைத் தேர்வு செய்தனர்.

ஈ) மருத்துவ படிப்பிற்கு என்னைத் தேர்வு செய்தனர்.

2.

அ) விடையை தேடிப்பார்க்க கடினமாக இருந்தது.

ஆ) விடையை தேடிப்பார்க்கக் கடினமாக இருந்தது.

இ) விடையைத் தேடிப்பார்க்க கடினமாக இருந்தது.

ஈ) விடையைத் தேடிப்பார்க்கக் கடினமாக இருந்தது.

3.

அ) தென்னிந்தியாவின் அடையாள சின்னமாக காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன.

ஆ) தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாக காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன.

இ) தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன.

ஈ) தென்னிந்தியாவின் அடையாள சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன.

4.

அ) சங்க இலக்கியமான கலித்தொகையில் ஏறுதழுவுதல் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆ) சங்க இலக்கியமான கலிதொகையில் ஏறுதழுவுதல் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன.

இ) சங்க இலக்கியமான கலிதொகையில் ஏறுதழுவுதல் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஈ) சங்க இலக்கியமான கலித்தொகையில் ஏறுதழுவுதல் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன.

5.

அ) அகத்திக்கீரையைப் பறித்தேன்.

ஆ) அகத்திகீரையைப் பறித்தேன்.

இ) அகத்திக்கீரையை பறித்தேன்.

ஈ) அகத்திகீரையை பறித்தேன்.

6.

அ) சிற்பக் கலையைப் போற்றிப் பாதுகாப்பது நமது கடமையாகும்.

ஆ) சிற்பக் கலையை போற்றிப் பாதுகாப்பது நமது கடமையாகும்.

இ) சிற்பக் கலையைப் போற்றி பாதுகாப்பது நமது கடமையாகும்.

ஈ) சிற்ப கலையைப் போற்றிப் பாதுகாப்பது நமது கடமையாகும்.

7.

அ) பத்திரிக்கை

ஆ) வாழ்த்துகள்

இ வாழ்கத்தமிழ்

ஈ) திருவளர்ச்செல்வன்

8.

அ) தந்தையை பாருங்கள்

ஆ) வந்தச்சிரிப்பு

இ) பார்த்தப் பையன்

ஈ) எவைத் தவறுகள்

9.

அ) தீபிடித்தது

ஆ) தனி சிறப்பு

இ) பூ பந்தல்

ஈ) மிகப் பெரியவர்

10.

அ) அச்சட்டை

ஆ) இந்த காலம்

இ) என கேட்பார்

ஈ) வருவதாக கூறு

11.

அ) நிலா சோறு

ஆ) கனா கண்டேன்

இ) வாழ்க்கைப் படகு

ஈ) உலக பந்து

கீழ்கண்டவற்றுள் எது சரி

12.

1) முதியவருக்குப் பணம் கொடு.

2) கதவைத் திற.

அ) 1, 2 சரி

ஆ) 1,2 தவறு

இ) 1 சரி, 2 தவறு

ஈ) 1 தவறு, 2 சரி

13.

1) எனக் கேட்டார்.

2) வருவதாக கூறு

அ) 1,2 தவறு

ஆ) 1 சரி, 2 தவறு

இ) 1 தவறு, 2 சரி

ஈ) 1, 2 சரி

14.

1) எட்டுத்தொகை

2) பத்துப்பாட்டு

அ) 1,2 தவறு

ஆ) 1 சரி, 2 தவறு

இ) 1, 2 சரி

ஈ) 1 தவறு, 2 சரி

15.

1) பெட்டிச்செய்தி

2) விழாகுழு

அ) 1, 2 சரி

ஆ) 1,2 தவறு

இ) 1 சரி, 2 தவறு

ஈ) 1 தவறு, 2 சரி

16.

1) கிடுகிடுக்கும் இடிமுழக்கம்

2) வானைப் பிளந்தன

அ) 1,2 தவறு

ஆ) 1 சரி, 2 தவறு

இ) 1 தவறு, 2 சரி

ஈ) 1, 2 சரி

17.

1) ஐந்தாம் வகுப்பு வரைதான்

2) கல்வி பயிலும் வாய்ப்புக்கிட்டியது.

அ) 1, 2 சரி

ஆ) 1,2 தவறு

இ) 1 சரி, 2 தவறு

ஈ) 1 தவறு, 2 சரி

18. 1) குதிரை தாண்டியது

2) கிளி பேசும்

அ) 1, 2 சரி

ஆ) 1,2 தவறு

இ) 1 சரி, 2 தவறு

ஈ) 1 தவறு, 2 சரி

19. 1) வந்த சிரிப்பு

2) 2) வாழ்க தமிழ்

அ) 1, 2 சரி

ஆ) 1,2 தவறு

இ) 1 சரி, 2 தவறு

ஈ) 1 தவறு, 2 சரி

20.

அ) அவ்வாறுப் பேசினான்

ஆ) அத்தனைச் சிறியது

இஅத்தகையப் பாடல்கள்

ஈ) அப்படிப்பட்ட காட்சி

கோடிட்ட இடத்தை நிரப்புக

21) மிக என்னும் சொல்லின்பின் வல்லினம்................

அ) மிகும்

ஆ) மிகாது

இ) சில இடங்களில் மிகும்

ஈ) சில இடங்களில் மிகாது

22. உவமைத்தொகையில் வல்லினம்...........

அ) மிகும்

ஆ) மிகாது

இ) சில இடங்களில் மிகும்

ஈ) சில இடங்களில் மிகாது

23..................வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகும்.

அ)7

ஆ)5

இ)4

ஈ) 6

24.

விளித்தொடர்களில் வல்லினம்..........

அ) மிகாது

ஆ) சில இடங்களில் மிகும்

இ) சில இடங்களில் மிகாது

ஈ) மிகும்

25.

பெயரெச்சத்தில் வல்லினம்........

அ) மிகும்

ஆ) மிகாது

இ) சில இடங்களில் மிகும்

ஈ) சில இடங்களில் மிகாது

விடைகள்

1. அ)

2. ஈ)

3. இ)

4. அ)

5. அ)

6. அ)

7. ஆ)

8. அ)

9. ஈ)

10. அ)

11. இ)

12. அ)

13. ஆ)

14. இ)

15. இ)

16. ஈ)

17. இ)

18. அ)

19. அ)

20. ஈ)

21. அ)

22. அ)

23. ஈ)

24. அ)

25. ஆ)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com