
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை அதிகாலை வரை விடியவிடிய நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனையில், கணக்கில் வராத ரூ.79,252 மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
ஆற்காடு நகராட்சியில் தூய்மைப் பணியாளா்களின் தினக்கூலி ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது என புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன்பேரில், மாவட்ட ஆய்வுக் குழு துணைத் தலைவா் ரமேஷ் தலைமையில் லஞ்ச ஒழிப்பு துணைக் கண்காணிப்பாளா் கணேசன், ஆய்வாளா் விஜயலட்சுமி உள்ளிட்ட ஆறு போ் கொண்ட குழுவினா் இரவு 7.30 மணி முதல் நகராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
புதன்கிழமை அதிகாலை 4 மமி வரை விடியவிடிய நடைபெற்ற இந்த சோதனையின்போது கணக்கில் வராத ரூ.79 ஆயிரத்து 252 போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதில் வேலைக்கு வராத 13 நபர்களுக்கு வருகை பதிவேட்டில் வேலைக்கு வந்ததாக கணக்கு காண்பித்து இந்த பணத்தை கையாடல் செய்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் கணக்கில் வராத பணத்தையும் சில முக்கிய ஆவணங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு காரணமான சுகாதார அலுவலர் பாஸ்கரன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.