ஆபரேஷன் அகால் 9வது நாள்: குல்காம் தாக்குதலில் 2 வீரர்கள் வீர மரணம்

ஆபரேஷன் அகால் தொடங்கி, 9வது நாளான இன்று குல்காம் தாக்குதலில் 2 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
ஆபரேஷன் அகால்
ஆபரேஷன் அகால்twitter
Published on
Updated on
1 min read

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் நடந்து வரும் ஆபரேஷன் அகால் 9வது நாளில், இரண்டு வீரர்கள் வீர மரணம் அடைந்ததாக ராணுவம் உறுதி செய்திருக்கிறது.

வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

தொடர்ந்து நடந்த சண்டையில், இரண்டு ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். நாட்டுக்காகப் பணியாற்றிய துணிச்சலான வீரர்களான பிரித்பால் சிங் மற்றும் ஹர்மிந்தர் சிங் ஆகியோரின் உயர்ந்த தியாகத்தை சினார் கார்ப்ஸ் கௌரவிக்கிறது. அவர்களின் துணிச்சலும் அர்ப்பணிப்பும் என்றென்றும் நமக்கு ஊக்கமளிக்கும்.

இந்திய ராணுவம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது மற்றும் துயரமடைந்த குடும்பங்களுடன் ஒற்றுமையுடன் நிற்கிறது என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 1ஆம் தேதி அகால் ஆபரேஷன் தொடங்கிய நிலையில், தொடர்ந்து 9 நாள்களாக நீடித்து வருகிறது. இதுவரை இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களது அடையாளம் மற்றும் பயங்கரவாத அமைப்பின் விவரங்கள் இன்னும் தெரியவரவில்லை.

அகால் வனப்பகுதியில், பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது, அங்கே பயங்கரவாதிகள் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டபோது, அகால் ஆபரேஷன் தொடங்கியது.

டிரோன்கள், ஹெலிகாப்டர்கள் மூலம், பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, துணை ராணுவத்தினர் பயங்கரவாதிகளுக்கு எதிரான என்கவுன்டரில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Summary

Two soldiers killed in ongoing encounter in Jammu and Kashmir's Kulgam: Army.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com