ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

சென்னையில் தங்கத்தின் விலை மூன்றாவது நாளாக புதன்கிழமை பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ.74,320-க்கு விற்பனையாகிறது.

News image

தங்கம் விலை மூன்றாவது நாளாக புதன்கிழமை பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ.74,320-க்கு விற்பனை.

ANI

Updated On :13 ஆகஸ்ட் 2025, 5:13 am

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை மூன்றாவது நாளாக புதன்கிழமை பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ.74,320-க்கு விற்பனையாகிறது.

அதன்படி, தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாள்களில் பவுனுக்கு ரூ.1,240 குறைந்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.75,000-க்கு விற்பனையான நிலையில், செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.640 குறைந்து ரூ.74,360-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், மூன்றாவது நாளாக புதன்கிழமை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.9,290-க்கும், பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ.74,320-க்கும் விற்பனையாகிறது. இதன் மூலம் தங்கத்தின் விலை மூன்று நாள்களில் பவுனுக்கு ரூ.1,240 குறைந்துள்ளது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் எந்த மாற்றமின்றி கிராம் ரூ.126-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1.26 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Summary

Gold prices in Chennai fell by Rs. 40 for 8 grams for the third day on Wednesday, selling at Rs. 74,320.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.