
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுதந்திர நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற 79-ஆவது சுதந்திர நாள் விழாவில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் ஆகியோர் திறந்த ஜீப்பில் சென்று காவல் துறை மற்றும் ஊர்காவல் படையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் ரூ.43 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 38 பயனாளிகளுக்கு வழங்கினார். வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 6 பேருக்கு வீட்டு மனை பட்டா, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்தொகை சார்பில் இரண்டு பெண்களுக்கு ரூ. 7 லட்சத்து 78 ஆயிரம் நிதியுதவி,
ரூ.2.50 லட்சத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் 5 பேர்களுக்கு நிதியுதவி, தாட்கோ மூலம் 9 பேர்களுக்கு ரூ.25.91 லட்சத்தில் தொழில் கடன் மானியம், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் ரூ.4 லட்சத்தில் வேளாண் இந்திரங்கள் மானியம் உள்பட 38 பயனாளிகளுக்கு ரூ.43 லட்சத்து 13 ஆயிரம் செலவில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.
மேலும், நிகழ்ச்சியில் சுதந்திர நாளை குறிக்கும் வகையில் மூவண்ண பலூன் அமைதியை குறிக்கும் வகையில் வெண்புறா பறக்க விடப்பட்டன. பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் காண்போர் மனதை கவர்தாக அமைந்திருந்தது.
இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ வழக்குரைஞர் எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, துணை ஆட்சியர் ஆசிப் அலி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, தாசில்தார் ரபிக் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.