
நாட்டின் 79-ஆவது சுதந்திர நாளையொட்டி, நாட்டு மக்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாட்டின் 79-ஆவது சுதந்திர நாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைக்கிறாா். தொடா்ந்து, தமிழ்நாட்டுக்கும், தமிழின வளா்ச்சிக்கும் பங்காற்றியவா்களைப் பெருமைப்படுத்த ‘தகைசால் தமிழா்’ என்ற பெயரிலான விருதும், ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழையும் வழங்கவுள்ளாா்.
இந்நிலையில் நாட்டு மக்களுக்கு முதல்வர் மு.க.ஸாட்லின் சுதந்திர நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர நாள் வாழ்த்துகள். இந்த நாளில், ஜனநாயகம் நிறைந்த ஒரு தேசத்தை கட்டியெழுப்புவதற்கான நமது உறுதியை மேலும் வலுப்படுத்துவோம்.
உண்மையான சுதந்திரம் என்பது மதவெறியை நிராகரித்தல், பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருதல் மற்றும் விளிம்பு நிலையில் மக்களை பாதுகாத்தல் என்பதாகும்.
சமத்துவத்தோடும், மாண்போடும், மரியாதையோடும் வாழ முடிகிற வகையில் நமது விடுதலைப் போராட்ட வீரர்களிகன் கனவுகளை லட்சியங்களை நிலைநிறுத்துவதாகும் என கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.