ஆதிக்கத்தை எந்நாளும் எதிர்த்து நிற்போம்: துணை முதல்வர் உதயநிதி

நாட்டு மக்களுக்கு 79-ஆவது விடுதலைத் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
Published on
Updated on
1 min read

நாட்டின் 79-ஆவது விடுதலைத் திருநாளை முன்னிட்டு ‘குறிஞ்சி’ இல்ல வளாகத்தில் நாட்டின் மூவர்ணக் கொடியை ஏற்றி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

79 ஆவது சுதந்திர நாள் நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வ மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றினார். இந்நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

மாநிலம் முழுவதும், மாநில முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில், ஆதிக்கத்தை எந்நாளும் எதிர்த்து நிற்போம் - விடுதலைத் திருநாள் போற்றிடுவோம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

நாட்டு மக்களுக்கு 79-ஆவது விடுதலைத் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜனநாயகம் - மதச்சார்பின்மை - சமத்துவம் - சகோதரத்துவம் - தன்னாட்சி அமைப்புகளின் சுதந்திரம் - வாக்குரிமை உட்பட நாட்டு விடுதலையின் அடித்தளங்களைப் பேணிக்காக்க இந்நாளில் உறுதியேற்போம்.

விடுதலைக்காகப் போராடிய வீரர்கள் - உயிர்நீத்த தியாகிகளை நினைவுகூர்வோம்.

ஆதிக்கத்தை எந்நாளும் எதிர்த்து நிற்போம் - விடுதலைத் திருநாள் போற்றிடுவோம்! என கூறியுள்ளார்.

Summary

We will always stand against domination - let us celebrate Independence Day!" he said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com