பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகன், மகள் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை

அமைச்சர் ஐ பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பதிவு செய்யப்பட்ட வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தல் வழக்கை மீண்டும் முறையாக விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் அமைச்சர் ஐ. பெரியசாமி வீடு

Published On :

திண்டுக்கல்: அமைச்சர் ஐ. பெரியசாமி, அவரது மகனும் திமுக சட்டப்பேரவை உறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமார் மற்றும் மகள் இந்திராணி ஆகியோரது வீடு மற்றும் திண்டுக்கல்லில் உள்ள பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

சட்டவிரோத பணமோசடி தொடர்பாக, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் சென்னை பசுமைவழி சாலையில் உள்ள வீடு, திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் உள்ள வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோன்று பெரியசாமியின் மகனும் திமுக எம்எல்ஏவுமான செந்தில் குமார் வீடு, மகள் இந்திராணி வீடு மற்றும் திண்டுக்கல்லில் பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மதுரை அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு திண்டுக்கல் துரைராஜ் நகரில் உள்ள அமைச்சர் ஐ பெரியசாமியின் வீட்டில் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இரண்டு குழுவினர் சீலப்பாடியில் உள்ள பெரியசாமியின் மகனும் பழனி எம்எல்ஏவுமான ஐ.பி. செந்தில் குமாரின் வீடு, திண்டுக்கல் வள்ளலார் நகரில் உள்ள அமைச்சரின் மகள் இந்திராணியின் வீட்டிலும் சோதனை நடத்தி வருகின்றன.

சட்டவிரோத பணமோசடி தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பதிவு செய்யப்பட்ட வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி மீண்டும் முறையாக ஒப்புதல் பெற்று முறையாக வழக்கை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

3 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை

திண்டுக்கல் கோவிந்தபுரத்தில் உள்ள வீட்டில் அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது மனைவியிடம் 3 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.