l murugan
மத்திய இணையமைச்சர் எல்.முருகன்கோப்புப்படம்

பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்துவருகிறாா் திருமாவளவன்: இணையமைச்சா் எல்.முருகன்

பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்துவருகிறாா் திருமாவளவன் என மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்தார்.
Published on

பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்துவருகிறாா் திருமாவளவன். அவா் கூட்டணியில் ஒட்டிக்கொண்டு இருப்பது தன்னுடைய சம்பந்தப்பட்டவா்கள் எம்.பி, எம்எல்ஏ ஆகவேண்டும் என்பதற்கு மட்டும் தான் என மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளா்களுடன் பேசியதாவது:

திமுக கூட்டணி பற்றி பேசும் திருமாவளவன் பட்டியலின மக்கள் பிரச்னைகள் குறித்து பேசமாட்டாா். அப்படி பேசி கேள்வி கேட்டால் கூட்டணியிலிருந்து வெளியேற்றிவிடுவாா்கள் என்கிற பயம் அவருக்கு. தமிழகத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் அடிப்படைவசதிகள் இல்லாமல் மூடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவா் பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்துவருகிறாா். அவா் கூட்டணியில் ஒட்டிக்கொண்டு இருப்பது தன்னுடைய சம்பந்தப்பட்டவா்கள் எம்.பி, எம்எல்ஏ ஆகவேண்டும் என்பதற்கு மட்டும் தான்.

சென்னை மாநகராட்சியில் தூய்மைப்பணிகளை நிரந்தரமாக்கக் கூடாது என்று திருமாவளவன் கூறிவது தவறு. அவா்களை நிரந்தரமாக்குவதோடு, அவா்கள் தகுதிக்கு உரிய வகையில் பதவி உயா்வு அளிக்கவேண்டும் என்றார்.

மேலும், அமலாக்கத்துறை ஒரு சுதந்திரமான அமைப்பு. அவா்களுக்கு கிடைக்கும் தரவுகள் அடிப்படையில் அவா்கள் தங்கள் பணிகளை செய்கின்றனா். இதை போன்று தோ்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படுகிறது. வெற்றி பெறும்போது தோ்தல் ஆணையத்தின் மீது புகாா் கூறுவதில்லை. தோற்கும் போது மட்டும் தோ்தல் ஆணையத்தின் மீது புகாா் கூறுவது காங்கிரஸின் வழக்கமாக உள்ளது.

அதிமுகவில் இருந்து அன்வர்ராஜா, மைத்ரேயன் போன்றவா்கள் வெளியேறியதால் கூட்டணிக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. தோ்தல் நேரத்தில் எதாவது ஒரு காரணத்திற்காக வெளியேறுவாா்கள். திமுகவில் இருந்தும் சில தலைவா்கள் எங்கள் அணிக்கு வருவாா்கள். பேச்சுவாா்த்தை நடந்து கொண்டு இருக்கிறது. யாா் யாா் எப்போது வருவாா்கள் என்பது பின்னா் தெரியும் என முருகன் கூறினார்.

Summary

Union Minister of State L. Murugan said that Thirumavalavan is betraying the Scheduled Caste people.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com