மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

மேட்டூர் அணை 5-ஆவது முறையாக நிரம்பியது!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் அதன் முழு கொள்ளளவான 120 அடியை நடப்பாண்டில் ஐந்தாவது முறையாக நிரம்பியுள்ளது தொடர்பாக...

water inflow to Mettur Dam

மேட்டூர் அணை 5-ஆவது முறையாக நிரம்பியது. - DIN

Published On :20 ஆகஸ்ட் 2025, 8:47 am IST

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் அதன் முழு கொள்ளளவான 120 அடியை நடப்பாண்டில் ஐந்தாவது முறையாக நிரம்பியுள்ளதால், காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நடப்பாண்டில் ஐந்தாவது முறையாக நிரம்பியதைத் தொடர்ந்து 16 கண் மதகுகள் வழியாக மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டது. கர்நாடக அணைகளின் உபரிநீர் வரத்து காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நடப்பு ஆண்டில் ஜூன் 29 ஆம் தேதி முதல் முறையாகவும், ஜூலை 5 ஆம் தேதி 2 ஆவது முறையாகவும், ஜூலை 20 ஆம் தேதி 3 ஆவது முறையாகவும், ஜூலை 25 ஆம் தேதி 4 ஆவது முறையாக மேட்டூர் அணை அடுத்தடுத்து நிரம்பியது. அதன் பிறகு மழை குறைந்த காரணத்தாலும் காவிரி டெல்டா பாசனத்திற்கு தொடரந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததாலும் அணையின் நீர் மட்டம் மெல்ல குறையத் தொடங்கியது.

இந்நிலையில், காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக கர்நாடக அணைகளிலிருந்து அதிக அளவில் உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடக அணைகளின் உபரிநீர் வரத்து காரணமாக கடந்த இரண்டு நாள்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு அணைக்கு வினாடிக்கு 36,242 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து படிப்படியாக அதிகரித்து இரவு 8 மணிக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.08,529 கனஅடியாக அதிகரித்தது. செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு 117.45 அடியாக இருந்த நீர் மட்டம் புதன்கிழமை அதிகாலை முழு கொள்ளளவன 120 அடியாக உயர்ந்தது. நள்ளிரவில் நடப்பு ஆண்டில் 5 ஆவது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது.

மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,08,529 அதிகரித்துள்ளது. அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 70,000 கனஅடியிலிருந்து வினாடிக்கு 90,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21,300 கனஅடி நீரும், உபரிநீர் போக்கி வழியாக வினாடிக்கு 68,700 கனஅடி நீரும் திறக்கப்படுகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி வீதம் மேல்மட்ட மதகுகள் வழியாக திறக்கப்படுகிறது.

மேலும், பொதுமக்கள் காவிரி ஆற்றில் குளிக்கவோ இறங்கவோ ஆற்றில் இறங்கி புகைப்படம் எடுக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 93.47 டி எம்.சி.உள்ளது.

Summary

The mettur dam reached its full capacity of 120 feet for the Fifth time this year.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.