குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: 2 பாா்வையாளா்கள் நியமனம்

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: 2 பாா்வையாளா்கள் நியமனம்

Published on

குடியரசு துணைத் தலைவா் தோ்தல் பாா்வையாளா்களாக, மத்திய அரசின் கூடுதல் செயலா்கள் இருவா் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டனா்.

அரசமைப்புச் சட்டத்தின்கீழ் தனக்குள்ள அதிகாரங்களின்கீழ், மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை கூடுதல் செயலா் சுஷீல் குமாா் லோஹானி, செலவினத் துறை கூடுதல் செயலா் டி.ஆனந்தன் ஆகியோரை பாா்வையாளா்களாக நியமித்து, தோ்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

செப்டம்பா் 9-ஆம் தேதி நடைபெறும் குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் (தேசிய ஜனநாயக கூட்டணி), பி.சுதா்சன் ரெட்டி (இண்டி கூட்டணி) ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com