தில்லியில் அபாய அளவை நெருங்கிச் செல்லும் யமுனை நதி!

தில்லியில் யமுனை நதி அபாய அளவுக்கு கீழே பாய்ந்து செல்வது தொடர்பாக...
தில்லியில் அபாய அளவை நெருங்கிச் செல்லும் யமுனை நதி!
Published on
Updated on
2 min read

புது தில்லி: தில்லியில் யமுனை நதி வியாழக்கிழமை காலை அபாய அளவை நெருங்கிச் செல்கிறது.

யமுனை நதியில் எச்சரிக்கை குறி 204.5 மீட்டா். அதே நேரத்தில் ஆபத்து குறி 205.3 மீட்டா் ஆகும். மேலும், ஆற்றின் அருகாமையில் இருப்பவா்களை வெளியேற்றும் நடவடிக்கை 206 மீட்டரில் தொடங்குகிறது.

வியாழக்கிழமை காலை யமுனை நதியின் நீர்மட்டம் ஆற்றின் ஓட்டம் மற்றும் வெள்ள அபாயங்களை கண்காணிப்பதற்கான முக்கியக் கண்காணிப்பு புள்ளியில் அபாய அளவான 205 மீட்டராக இருந்தது.

கனமழை காரணமாக ஆற்றில் 1.78 லட்சம் கனஅடி தண்ணீர் வந்ததால், ஹத்னிகுண்ட் தடுப்பணையின் 18 கதவுகளும் திறக்கப்பட்டன, இதன் விளைவாக ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்தது.

கடந்த சில வாரங்களாக நீர் மட்டத்தில் ஏற்பட்ட தொடர்ச்சியான மாற்றத்தால் நிர்வாகம் விழிப்புடன் இருந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

முன்னதாக, புதன்கிழமை தில்லி முதல்வர் ரேகா குப்தா, யமுனா பஜாரைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீா் நுழைந்துள்ளதை ஆய்வு செய்தாா். பின்னர், வெள்ளத்தில் மூழ்கிய தெருக்களில் நடந்து சென்று குடியிருப்பாளா்களுடன் நிலைமைகள் குறித்து கேட்டறிந்தார். நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, உணவு மற்றும் மருத்துவ நிவாரணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள பள்ளிகளுக்குச் செல்லுமாறு அவா்களைக் கேட்டுக்கொண்டுள்ளோம்.

மின்சாரம் பிரச்னைகளை போக்குவதற்காக சூரிய சக்தியால் இயங்கும் ஃப்ளட் லைட்களுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம், இதனால் இரவில் எந்த பிரச்னையும் இருக்காது.

தில்லியின் பழைய ரயில்வே பாலத்தில் உள்ள யமுனா ஆற்றின் நீா் மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு 205.79 மீட்டரை எட்டியது, இது திங்கள்கிழமை பிற்பகல் 205.55 மீட்டரைத் தொட்டது, இது 205.33 மீட்டரின் ’ஆபத்து’ குறியீட்டை மீறியது, அதன் பின்னா் அதிகரித்து வருகிறது.

தில்லி பரவலான வெள்ளத்தை அனுபவிக்காது என்றும், அது ஒரு பாதுகாப்பான மண்டலத்தில் இருப்பதாகவும், எந்தவொரு வெள்ளமும் வெள்ள சமவெளிகளுக்கு மட்டுப்படுத்தப்படும் என்று திங்கள்கிழமை உறுதியளித்திருந்தாா்.

செவ்வாய்க்கிழமை ஆய்வுக்குப் பிறகு, ‘தண்ணீா் தேங்கி நிற்காமல் சென்றுக்கொண்டு இருக்கிறது.‘ நீா் மட்டம் உயா்ந்துள்ளது, ஆனால் அது ஒன்று அல்லது இரண்டு நாள்களில் குறையும். தில்லியில் வெள்ளம் போன்ற சூழ்நிலை இல்லை‘என்று கூறினாா்.

புதன்கிழமை காலை யமுனை நீா் மட்டம் ஒரு குறுகிய காலத்திற்கு 206 மீட்டரைத் தொடும் வாய்ப்பு இருந்தது, ஆனால் நிலைமை இப்போது முற்றிலும் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதி தாழ்வான யமுனை வெள்ளச் சமவெளியில் இருப்பதால், நீா் இங்கு சென்றடைந்தது. ஆனால் அது மேலும் பரவவில்லை. தில்லியில் வெள்ளம் போன்ற சூழ்நிலை இல்லை. இது நீா் மட்டத்தின் உச்ச உயா்வாக இருந்தது, அது இப்போது குறைந்து வருகிறது என்று அவா் விளக்கினாா்.

கட்டுப்பாட்டு அறையிலிருந்து நிலைமை தொடா்ந்து கண்காணிக்கப்படுவதாக மக்களுக்கு உறுதியளித்த அவா், நிவாரண மற்றும் மீட்புக் குழுக்கள் முழுமையாக நிறுத்தப்பட்டு, எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்க தயாராக உள்ளன என்றாா்.

‘ஒவ்வொரு அடியிலும் அரசு உங்களுடன் நிற்கிறது என்பதை தில்லி மக்களுக்கு நான் உறுதியளிக்க விரும்புகிறேன். உங்கள் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். எந்த விதமான கவலையும் தேவையில்லை ‘என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

முன்னதாக, கனமழை காரணமாக ஆற்றில் 1.78 லட்சம் கனஅடி தண்ணீர் வந்ததால், ஹத்னிகுண்ட் தடுப்பணையின் 18 கதவுகளும் திறக்கப்பட்டன, இதன் விளைவாக நீர்மட்டம் உயர்ந்தது.

நீர்ப்பாசனத் துறையின் நிர்வாகப் பொறியாளர் விஜய் கார்க் கூறுகையில், "சமீபத்திய மழைக்குப் பிறகு ஆற்றில் 1.78 லட்சம் கனஅடி தண்ணீர் வந்துள்ளது. இது இந்த பருவத்தின் அதிகபட்ச நீர்மட்டம்" என்றார்.

தொடர் மழை காரணமாக ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது, மேலும் பல பகுதிகளில் வெள்ளம் போன்ற சூழ்நிலைகள் காணப்படுகின்றன.

Summary

The Yamuna River in the national capital is flowing close to the danger level.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com