பல்லாவரம்,குரோம்பேட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி

பல்லாவரம் மேம்பாலத் தடுப்பில் மோதிய கல்லூரி பேருந்தால் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பல்லாவரம் மேம்பாலத் தடுப்பில் மோதிய கல்லூரி பேருந்தால் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
பல்லாவரம் மேம்பாலத் தடுப்பில் மோதிய கல்லூரி பேருந்தால் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
Published on
Updated on
1 min read

சென்னை பல்லாவரம் மேம்பாலத் தடுப்பில் மோதிய கல்லூரி பேருந்தால் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னை பல்லாவரம் மேம்பாலத் தடுப்பில் தனியார் கல்லூரி பேருந்து ஒன்று மோதியதால் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால், பல்லாவரம் மேம்பாலம் தற்காலிகமாக ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு, பல்லாவரத்தில் இருந்து விமான நிலையம் செல்லும் மார்க்கத்தில் வானங்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

மறுமார்க்கத்தில் தாம்பரம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் மேம்பாலத்தின் கீழே மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

இதனால் குரோம்பேட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி. சாலையில் சுமார் 2 கி.மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் அலுவலகம் செல்வோர், பள்ளி-கல்லூரிக்கு செல்வோர் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

கல்லூரி பேருந்தால் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Summary

A college bus crashed into the Pallavaram flyover barrier in Chennai, causing severe traffic congestion on G.S.T. Road.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com