இணையப் பாதுகாப்பு, நெறிமுறை ஹேக்கிங் படிப்பில் சேருவது எப்படி?

சைபர் பாதுகாப்புத் துறையில் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளவதற்கு ஒரு அருமையான வாய்ப்பாக, இணையப் பாதுகாப்பு, நெறிமுறை ஹேக்கிங் படிப்பு
இணையப் பாதுகாப்பு, நெறிமுறை ஹேக்கிங் படிப்பு
இணையப் பாதுகாப்பு, நெறிமுறை ஹேக்கிங் படிப்பு
Published on
Updated on
1 min read

10+2, டிப்ளமோ, இன்ஜினியரிங் மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் சைபர் பாதுகாப்புத் துறையில் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளவதற்கு ஒரு அருமையான வாய்ப்பாக, இணையப் பாதுகாப்பு, நெறிமுறை ஹேக்கிங் படிப்புக்கான ஆன்லைன் பயிற்சிக்கான அறிவிப்பை தேசிய சைபர் பாதுகாப்பு அகாதமி வெளியிட்டுள்ளது. இதற்கு கர்நாடக மாநிலம் முழுவதில் இருந்தும் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

உலகம் முழுவதும் வளர்ந்துவரும் டிஜிட்டல் தொழில்நுட்பம் யுகம் மனித வாழ்க்கையை முற்றிலும் மாற்றியுள்ளது. இதன்மூலம் பல்வேறு வசதிகள் ஏற்பட்டாலும் அதற்கு இணையாக பயனர்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்துதான் வருகின்றன. இதனால் இணையப் பயனாளர்களின் தகவல் பாதுகாப்பை உறுதி செய்வது இன்றியமையாததாகிறது.

ஒவ்வொரு நாளும் சைபர் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதால், நிறுவனங்களுக்கு முக்கியமான தரவைப் பாதுகாக்கவும், ஹேக்கிங் தாக்குதல்களைத் தடுக்கவும், டிஜிட்டல் பாதுகாப்பை வலுப்படுத்தவும் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் தேவையாக உள்ளது.

இந்த நிலையில், சைபர் பாதுகாப்புத் துறையில் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளவதற்கு ஒரு அருமையான வாய்ப்பாக, இணையப் பாதுகாப்பு, நெறிமுறை ஹேக்கிங் படிப்புக்கான ஆன்லைன் பயிற்சிக்கான அறிவிப்பை தேசிய சைபர் பாதுகாப்பு அகாதமி வெளியிட்டுள்ளது.

இந்திய அரசின் சான்றிதழ் பெற்ற இணையப் பாதுகாப்பு மற்றும் நெறிமுறை ஹேக்கிங் படிப்புகளுக்கான ஆன்லைன் பயிற்சிக்கு கர்நாடகா மாநிலம் முழுவதிலுமிருந்து தேசிய சைபர் பாதுகாப்பு அகாடமி ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

10+2, டிப்ளமோ, இன்ஜினியரிங் மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் சைபர் பாதுகாப்புத் துறையில் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள இது ஒரு அருமையான வாய்ப்பாகும்.

விண்ணப்பதாரர்கள் சைபர் பாதுகாப்பு அதிகாரி, சைபர் பாதுகாப்பு மற்றும் நெறிமுறை ஹேக்கிங் டிப்ளமோ, சைபர் பாதுகாப்பு மற்றும் நெறிமுறை ஹேக்கிங் முதுகலை டிப்ளமோ மற்றும் சைபர் பாதுகாப்பு மற்ரும் நெறிமுறை ஹேக்கிங் முதுகலை திட்டம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில் இருந்து தேர்வு செய்யலாம்.

இந்த படிப்புகள் ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை நீடிக்கும், இது பாடங்களில் நல்ல பயிற்சி பெற போதுமான வாய்ப்பை வழங்குகிறது. படிப்பை வெற்றிகரமாக முடித்தவுடன், பங்கேற்பாளர்களுக்கு இந்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும், இது சைபர் பாதுகாப்பில் அவர்களின் நிபுணத்துவத்தை அங்கீகரிக்கும்.

இந்த படிப்புகளின் பட்டதாரிகள் சைபர் பாதுகாப்பு அதிகாரி, தகவல் அதிகாரி மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர் போன்ற பல்வேறு வேலை வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம்.

இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாய்ப்புகள் இருப்பதால், தகுதியான விண்ணப்பதாரர்கள் சைபர் பாதுகாப்பில் தங்கள் தொழில் பயணத்தைத் தொடங்க இதுவே சரியான நேரம்.

ஆர்வமும் தகுதியும் உள்ளோர் www.nacsindia.org என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 7893141797 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

Summary

cybers ecurity and ethical hacking course

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com