
சென்னை கண்ணகி நகரில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
சென்னை மாநகருக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அதன்படி, சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், ராஜா அண்ணாமலைபுரம், அடையாறு, பள்ளிக்கரணை, மேடவாக்கம், சைதாப்பேட்டை, நீலாங்கரை, பட்டினப்பாக்கம், மயிலாப்பூா், மந்தைவெளி, நுங்கம்பாக்கம், கோயம்பேடு, அண்ணா நகா், செனாய் நகா், அமைந்தகரை, முகப்போ் உள்ளிட்ட இடங்களில் அதிகபட்சமாக 120 மி.மீ. மழை பெய்தது.
சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்த பலத்த மழையால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் மழை நீா் தேங்கி நின்றது.
இந்நிலையில், சென்னை கண்ணகி நகரில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த ஒப்பந்த பணியாளர் வரலட்சுமி(30). இவர் சனிக்கிழமை (ஆக.23) காலை அந்த பகுதிகளில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
தூய்மைப் பணிக்காக இரவு பெய்த மழையால் தேங்கிருந்த மழைநீரில் கால் வைத்த போது மின்சாரம் பாய்ந்ததில் தண்ணீரில் விழுந்துள்ளாா். இதைப் பாா்த்த அப்பகுதியினா் அவரை மீட்க முயற்சி செய்தனா். ஆனால், அவா்களால் மீட்க முடியவில்லை.
தகவலறிந்த மின்வாரிய ஊழியா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று, மின்சாரத்தைத் துண்டித்து வரலட்சுமி உடலை மீட்டனா்.
இந்த சம்பவம் மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் நடந்ததாக அந்த பகுதி மக்கள் மின்சார வாரியத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.