
சென்னை: இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கக் கூடிய வலிமை உள்ள சுதர்சன் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டும் என விசிக தலைவர் தொல்.திருமாவளன் தெரிவித்தார்.
குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் இந்தியா கூட்டணி சாா்பில் போட்டியிடும் சுதா்சன் ரெட்டி ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்தாா். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பி.,க்களிடம் ஆதரவு திரட்டினாா்.
இதில், விசக தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் பேசுகையில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கக் கூடிய வலிமை உள்ள ஒருவரை குடியரசுத் குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும். ஆகவே, அகில இந்திய அளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் செப்டம்பா் 9-ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் சுதர்சன் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டும் என திருமாவளவன் வேண்டுகோள் விடுத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.