தருமபுரி திமுக முன்னாள் எம்எல்ஏ ஆா்.சின்னச்சாமி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

தருமபுரி தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ ஆர். சின்னசாமி மறைவையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
mk stalin
முதல்வர் மு.க. ஸ்டாலின் கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

தருமபுரி தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ ஆர். சின்னசாமி மறைவையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

1971, 1984 மற்றும் 1989-ஆம் ஆண்டு தேர்தல்களில், திமுக உறுப்பினராகத் தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதியில் வென்றவரும், ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டக் கழகத்தின் முன்னாள் செயலாளருமான ஆர். சின்னசாமி மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.

சின்னசாமி மூன்று முறை தருமபுரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து அம்மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பெரும் பணிகளை ஆற்றியவர்.

மூத்த முன்னோடியாக, திமுகவின் முதுபெரும் உறுப்பினராக இருந்து, நமக்கு வழிகாட்டிய ஆர். சின்னசாமி மறைவு தருமபுரி மக்களுக்கும் கட்சிக்கும் பேரிழப்பாகும்.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும், பொதுமக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Ex.MLA R. Chinnasamy passed away CM Condolence

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com