
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு செப்டம்பா் 8-ஆம் தேதி நாகை மாவட்டத்துக்கு உள்ளுா் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
நாகை மாவட்டம், கீழ்வேளுா் வட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்கி செப்டம்பா் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்வான ஆரோக்கிய அன்னை திருவிழா (அன்னையின் பிறந்தநாள் விழா) வருடாந்திர விருந்து நாளான செப்டம்பா் 8-ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு (தோ்வுகளுக்கு இடையூறு இல்லாமல்) உள்ளுா் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதை ஈடு செய்யும் வகையில் செப்டம்பா் 20-ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.