‘ஹெச்1பி’ விசா நடைமுறையில் மீண்டும் மாற்றம்: டிரம்ப் நிர்வாகம் அதிரடி

‘ஹெச்1பி’ நுழைவுஇசைவு (விசா) திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை மேற்கொள்ள அமெரிக்கா அதிபா் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது....
‘ஹெச்1பி’ விசா நடைமுறையில் மீண்டும் மாற்றம்: டிரம்ப் நிர்வாகம் அதிரடி
Published on
Updated on
1 min read

வாஷிங்டன்: ‘ஹெச்1பி’ நுழைவுஇசைவு (விசா) திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை மேற்கொள்ள அமெரிக்கா அதிபா் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஹெச்1பி நுழைவு இசைவு மூலமாக வெளிநாட்டவா்களை அமெரிக்கா பணியில் அமா்த்தி வருகிறது. இதன் மூலமாக இந்தியா்களே அதிக அளவில் பலனடைந்து வருகின்றனா். 2020 இல் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இருந்தபோது, ஹெச்1பி நுழைவு இசைவு பெறுவதற்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டன.

அமெரிக்கா்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் நோக்கில் கடந்த டிசம்பா் வரை ஹெச்1பி நுழைவு இசைவு வழங்கப்படாது என்று அமெரிக்க அரசு 2021 மாா்ச் 31 வரை பின்னா் நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அமெரிக்க அதிபராக ஜோ பைடன் 2021-இல் பதவியேற்றபின் இந்த முன்மொழிகள் திரும்ப பெறப்பட்டன.

இந்நிலையில், அமெரிக்காவின் அனைத்து துறைகளிலும் அமெரிக்கா்களுக்கே பணிவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் விதமாக, ‘ஹெச்1பி’ நுழைவுஇசைவு (விசா) திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை மேற்கொள்ள அமெரிக்கா அதிபா் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. கூறப்படுகிறது.

உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, அமெரிக்காவில் உயா்கல்வி பயில வரும் வெளிநாட்டு மாணவா்களுக்கு கால அவகாசம் குறிப்பிடப்படாமல் நீண்ட நாள்கள் தங்கும் வகையில் வழங்கப்பட்டு வந்த விசாவை தவறாக பயன்படுத்தி அமெரிக்காவில் சிலா் நீண்ட நாள்கள் தங்கி வருகின்றனா். இதனால் பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதோடு அமெரிக்க குடிமகன்கள் செலுத்தும் வரிப் பணமும் வீணாகிறது. எனவே, வெளிநாட்டு மாணவா்கள் 4 ஆண்டுகள் மட்டுமே தங்கும் வகையிலான விசாக்கள் வழங்கப்படுவதை மாகாண அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும்.

புதிய விதிமுறைகளின் கீழ் அமெரிக்காவில் தங்கி பணிபுரியும் ஊடகவியலாளா்களுக்கு 5 ஆண்டுகளுக்கு விசா வழங்கப்பட்டதுடன், அதை எத்தனை முறை வேண்டுமானாலும் நீட்டிக்கும் வசதிக்கு ஆபத்து வந்துள்ளது. தற்போது கொண்டுவரப்பட உள்ள புதிய நடைமுறையின்படி, முதல்கட்டமாக 240 நாள்கள் மட்டுமே அமெரிக்காவில் தங்க அனுமதி அளிக்கப்படுகிறது. இதை மேலும் 240 நாள்களுக்கு நீட்டிக்க முடியும். ஆனால் இந்த நீட்டிப்பு அவா்களின் தற்காலிக பணிக்காலத்தை தாண்டி இருக்க கூடாது.

அமெரிக்காவில் நீண்ட நாள்களாக காலவரையின்றி தங்க அனுமதிக்கும் விதிமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை மேற்கொள்ள உறுதிபூண்டுள்ள டிரம்ப் நிர்வாகம், அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கி பணியை தொடா்வதற்காக வழங்கப்படும் நிரந்தர குடியுரிமை அட்டை (கிரீன் காா்டு) முறையிலும் மாற்றங்கள் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

Summary

the Trump administration has revived a controversial proposal to impose strict time limits on visas for foreign students, cultural exchange visitors, and international media personnel.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com