ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மரியாதை செலுத்தியது தொடர்பாக...
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி கே.பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி கே.பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
Updated on
1 min read

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் வெள்ளிக்கிழமை காலை 10.45 மணியளவில் எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி மலர் வளையம் மரியாதை செலுத்தினர்.

அதைத் தொடர்ந்து அதிமுகவின் மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர். அதிமுகவினர் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து வந்து மரியாதை செலுத்தினர்.

6 முறை தமிழக முதல்வராக பொறுப்புவகித்த ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Edappadi Palaniswami pays homage at Jayalalithaa's memorial!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com