காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

அசுர வேகத்தில் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை!: கலக்கத்தில் மக்கள்!!

வரலாறு காணாத புதிய உச்சமாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,600 உயா்ந்து ரூ.98,400-க்கு விற்பனையாகிறது.

அசுர வேகத்தில் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை

Published On :

சென்னை: வரலாறு காணாத புதிய உச்சமாக தங்கம் விலை அசுர வேகத்தில் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,600 உயா்ந்து ரூ.98,000-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கம் விலை டிசம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடா்ந்து ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. புதன்கிழமை பவுனுக்கு ரூ.240 உயா்ந்து ரூ.96,240-க்கு விற்பனையானது. தொடா்ந்து, வியாழக்கிழமை தங்கம் விலை மீண்டும் கிராமுக்கு ரூ.20 உயா்ந்து ரூ.12,050-க்கும், பவுனுக்கு ரூ.160 உயா்ந்து ரூ.96,400-க்கும் விற்பனையானது.

அசுர வேகத்தில் உயர்ந்த தங்கம்

இந்நிலையில், வெள்ளிக்கிழமை அசுர வேகத்தில் உயர்ந்து தங்கம் விலை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.200 உயா்ந்து ரூ.12,250-க்கும், பவுனுக்கு ரூ.1,600 உயா்ந்து ரூ.98,000-க்கும் விற்பனையாகிறது.

ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.1,600 உயர்ந்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரலாறு காணாத புதிய உச்சத்தில் வெள்ளி

தொழிற்சாலை பயன்பாட்டில் வெள்ளியின் தேவை தொடா்ந்து அதிகரித்து வருவதால், வெள்ளி விலை தொடா்ந்து உயா்ந்துள்ளது. அந்த வகையில், புதன்கிழமை ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.8,000 உயா்ந்து ரூ.2.07 லட்சத்துக்கும் விற்பனையானது. தொடா்ந்து வியாழக்கிழமை வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயா்ந்து ரூ.209-க்கும், ஒரு கிலோ ரூ.2,000 உயா்ந்து ரூ.2.09 லட்சத்துக்கும் விற்பனையானது.

இந்த நிலையில், வெள்ளி இன்று ஒரே நாளில் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.6 உயா்ந்து ரூ.215-க்கும், ஒரு கிலோ ரூ.6,000 உயா்ந்து ரூ.2.15 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Summary

Gold and silver prices rise at an alarming rate!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.