

பெர்லின்: அமெரிக்கா தலைமையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் உக்ரைன் போருக்கு விரைவில் தீர்வு எட்டப்படும் எனத் தெரிகிறது.
தங்களது அண்டை நாடான உக்ரைன், அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோவில் இணைந்தால், அது தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ரஷியா கூறி வருகிறது. எனினும், நேட்டோவில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்ததையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022, பிப்ரவரி மாதம் படையெடுத்தது. இதில் ஆயிரக்கணக்கானோா் உயிரிழந்த நிலையில், ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையேயான நான்காண்டு உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா முன்வைத்துள்ள அமைதி திட்டம் குறித்து, அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி பெர்லினில் அமெரிக்க பிரதிநிதிகளுடன் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இதற்காக ஜெர்மனி தலைநகர் பெர்லினுக்கு ஸெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை (டிச. 14) ஜெர்மனி சென்றடைந்தார்.
அப்போது அவர் போர் நிறுத்தம் ஏற்படுவது குறித்து உக்ரைன் தரப்பு நிலைப்பாட்டைப் பற்றி குறிப்பிடும்போது, நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைனையும் உறுப்பினராக இணைத்துக்கொள்ள வலியுறுத்தி வந்த கோரிக்கையை விலக்கிக்கொள்ள தயாராக இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளையில், மேற்கத்திய நாடுகளின் உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். உக்ரைன் நிலப்பகுதிகளை ரஷியாவுக்கு விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்பதில் உறுதியாக இருப்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.