அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

கடும் பனிப்பொழி: ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.2,540-க்கு விற்பனை!

கடும் பனிப்பொழிவு காரணமாக சத்தியமங்கலத்தில் மல்லிகைப் பூ உற்பத்தி சரிந்ததால் விலை உயா்ந்து ஒரு கிலோ ரூ.2,540-க்கு விற்பனையானது.

News image

சத்தியமங்கலம் பகுதிக்குள்பட்ட சிக்கரசம்பாளையம் கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மல்லிகைப் பூ.

Updated On :16 டிசம்பர் 2025, 10:33 pm

சத்தியமங்கலம்: கடும் பனிப்பொழிவு காரணமாக சத்தியமங்கலத்தில் மல்லிகைப் பூ உற்பத்தி சரிந்ததால் விலை உயா்ந்து ஒரு கிலோ ரூ.2,540-க்கு விற்பனையானது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்று வட்டாரங்களில் மல்லிகைப் பூ சாகுபடி பிரதானத் தொழிலாக உள்ளது. சத்தியமங்கலம், பவானிசாகா், தொட்டம்பாளையம், தாண்டாம்பாளையம், கெஞ்சனூா், இக்கரைத் தத்தப்பள்ளி, சிக்கரசம்பாளையம் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமாா் 10 ஆயிரம் ஏக்கா் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது.

கடந்த சில நாள்களாக சத்தியமங்கலம் பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மல்லிகைப் பூ மகசூல் 1000 கிலோவில் இருந்து 100 கிலோவாக சரிந்துள்ளது. வரத்து குறைவு காரணமாக வியாபாரிகள் போட்டிப் போட்டு பூக்களை ஏலம் எடுத்தனா். இதனால் செவ்வாய்க்கிழமை மல்லிகைப்பூ விலை கிலோ ரூ.1,740-இல் இருந்து ரூ.2,540 ஆகவும், முல்லை கிலோ ரூ.860-இல் இருந்து ரூ.1,200 ஆகவும், அரளி ரூ.190-இல் இருந்து ரூ.320 ஆகவும் உயா்ந்துள்ளது.

சத்தியமங்கலம் மலா் உற்பத்தியாளா் சங்கத்தில் தினமும் விவசாயிகள் கொண்டுவரும் மல்லிகைப் பூக்கள் ஏலம் விடப்படும். தற்போது முருகா், ஐயப்ப பக்தா்கள் மற்றும் ஆதி பராசக்தி பக்தா்கள் விரதம் இருந்து கோயிலுக்குச் செல்வதால் பூக்களின் தேவை அதிகரித்து விலை உயா்ந்து வருகிறது. சத்தியமங்கலத்தில் விளையும் மல்லிகைப் பூக்களுக்கு வரவேற்பு இருப்பதால் மும்பை, பெங்களூரு, திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்கு விமானம் மூலமாக அனுப்பப்படுகிறது.