

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து மீன் பிடித்ததாக வங்கதேச மீனவர்கள் 35 பேரை இந்திய கடலோர காவல்படை கைது செய்துள்ளது.
இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
வங்காள விரிகுடாவில் புதன்கிழமை காலை சந்தேகத்திற்கிடமான இரண்டு இழுவை படகுகளை இந்திய கடலோர காவல்படையினர் கண்டுள்ளனர். இதையடுத்து, உடனடியாக அங்கு சென்ற கடலோர காவல்படையினர் இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக வங்கதேச மீனவர்கள் 35 பேரையும், அவர்களது இரண்டு மீன்பிடிப் படகுகளையும் சிறைப்பிடித்து ஃப்ரேசர்கஞ்ச் மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.
முதற்கட்ட விசாரணைக்கு பிறகு அவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டனர். மீனவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் வியாழக்கிழமை பிற்பகல் காக்ட்விப் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில், வங்காள விரிகுடாவில் இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த பல வங்கதேச மீன்பிடிப் படகுகள் இந்திய கடலோர வல்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.