

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் அதிரடியாக விளையாடி அரை சதமடித்து அசத்தினர்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 5-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் அகமதாபாதில் இன்று (டிசம்பர் 19) நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் அய்டன் மார்க்ரம் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்தது.
அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா ஆகியோர் களமிறங்கினர். இருவரும் பொறுப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அபிஷேக் சர்மா 34(21 பந்துகள்), சஞ்சு சாம்சன் 37(22 பந்துகள்) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். திலக் வர்மா, கேப்டன் சூர்ய குமார் யாதவ், உள்ளே வந்தனர்.
சூர்ய குமார் யாதவ் இந்த முறையும் ஏமாற்றம் அளித்தார். அவர் 5 ரன்களுக்கு வெளியேறினார். தொடர்ந்து ஹர்திக் பாண்டியா களம் கண்டார். பிறகு திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா ஆட்டத்தில் அனல் பறந்தது. இருவரும் அரைசதம் கடந்த நிலையில் ஹர்திக் பாண்டியா 25 பந்துகளில் 63 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 231 ரன்கள் குவித்தது. திலக் வர்மா 42 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து ரன்அவுட் ஆனார். ஷிபம் துபே 10 ரன்கள், ஜிதேஷ் சர்மா ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.