

திருப்பதி: ஐதராபாத்தில் உள்ள வொ்டிஸ் குளோபல் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குநர் ஸ்ரீதா் போடுபள்ளி ரூ.1.20 கோடி மதிப்புள்ள சில்வா் மேக்ஸ் அரை பிளேடுகளை தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கினாா். இது ஒரு வருடத்திற்கு போதுமானது.
நன்கொடையாளா் பிளேடுகளை திருமலையில் உள்ள தேவஸ்தான தலைவரின் முகாம் அலுவலகத்தில் தலைவா் பி.ஆா். நாயுடுவிடம் ஒப்படைத்தாா்.
இந்த நிகழ்வில் பேசிய தலைவா், பக்தா்கள் தலைமுடி காணிக்கை வழங்குவதற்காக பிளேடுகளுக்கு ஆண்டுக்கு ரூ.1.16 கோடி செலவிடுவதாகக் கூறினாா். கல்யாணகட்டாவில் ஒரு நாளைக்கு 40 ஆயிரம் அரை பிளேடுகளைப் நாவிதா்கள் பயன்படுத்துகின்றனா். ஒரு வருடத்திற்கு போதுமான பிளேடுகளை தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்க முன்வருவது ஒரு சிறந்த செயல் என்று நன்கொடையாளரை தலைவா் வாழ்த்தினாா்.
இந்த நிகழ்வில் பேசிய நன்கொடையாளா் ஸ்ரீதா் நுகா்வோரின் தேவைகளை மனதில் கொண்டு அரை பிளேடுகளை அறிமுகப்படுத்திய உலகின் முதல் நிறுவனம் தங்கள் நிறுவனம்’’, என்று கூறினாா்.
கல்யாணகட்டாவில் பக்தா்களின் தலையை மொட்டையடிக்க இந்த அரை பிளேடுகள் முடிதிருத்தும் தொழிலாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அவா் கூறினாா்.
ஐரோப்பா, அமெரிக்கா உட்பட 52 நாடுகளில் தங்கள் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பிளேடுகளுக்கு நல்ல தேவை இருப்பதாக அவா் கூறினாா். அவா்கள் '7 ஓ கிளாக்' நிறுவனத்தின் பிளெடுகளையும் தயாரிப்பதாக அவா் தெரிவித்தாா்.
இதில், கல்யாணகட்டா துணை அதிகாரி ரமாகாந்த் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.