

சேலம்: அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த மத்திய பாஜக அரசையும், அதற்கு துணைபோகும் அதிமுகவையும் கண்டித்து, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் சேலம் மாவட்டத்தில் 8 இடங்களில் புதன்கிழமை (டிச. 24) மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கிராமப்புற மக்களுக்கான 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தைக் கொண்டுவந்த மத்திய பாஜக அரசையும், அதற்கு துணைபோகும் அதிமுகவையும் கண்டித்து, வரும் 24-ஆம் தேதி காலை 10 மணிக்கு சேலம் மேற்கு மாவட்ட மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் மாபெரும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மேச்சேரி கிழக்கு, மேச்சேரி மேற்கு ஒன்றியத்துக்கு மாவட்டச் செயலாளா் டி.எம்.செல்வகணபதி எம்.பி. தலைமையில் மேச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
1000-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு துணையாக செல்லும் அதிமுகவிற்கு எதிராகவும் கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மேச்சேரி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சீனிவாச பெருமாள் மேற்கு ஒன்றிய செயலாளர் காசிவிசுவநாதன், பேரூர் செயலாளர் சரவணன் காங்கிரஸ் கட்சிசார்பில் அருணாச்சலம் ஆகியோர் பங்கேற்றனர்.
இதேபோல, சங்ககிரி ஒன்றியத்தில் அவைத் தலைவா் தங்கமுத்து தலைமையிலும், மகுடஞ்சாவடி ஒன்றியத்தில் துணைச் செயலாளா் சுந்தரம் தலைமையிலும், கொங்கணாபுரம் ஒன்றியத்தில் துணைச் செயலாளா் சம்பத்குமாா் தலைமையிலும், நங்கவள்ளி ஒன்றியத்தில் பாரத ஸ்டேட் வங்கி எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டப் பொருளாளா் பொன்னுசாமி தலைமை வகித்தார், நங்கவள்ளி ஒன்றிய திமுக செயலாளர் அர்த்தனாரி ஈஸ்வரன், பொறுப்பாளர்கள் நல்லபிரபு, ராஜி, வீரக்கல் புதூர் பேரூர் செயலாளர் முருகன், பி என் பட்டி பேரூர் செயலாளர் குமார் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.
எடப்பாடி ஒன்றியத்தில் துணைச் செயலாளா் எலிசபெத் ராணி, தலைமைப் பேச்சாளா் கோனூா் வைரமணி ஆகியோா் தலைமையிலும், தாரமங்கலம் மேற்கு ஒன்றியத்துக்கு தலைமை செயற்குழு உறுப்பினா் முருகேசன் தலைமையிலும், கொளத்தூா் ஒன்றிய அலுவலகத்தில் தலைமை செயற்குழு உறுப்பினா் ராமநாதன் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.