கணையப் புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது எப்படி?
கணையப் புற்றுநோய் ஒரு சிக்கலான நோயாகும், நோய் ஏற்பட சரியான காரணங்கள் வேறுபடலாம் என்றாலும், அறியப்பட்ட சில ஆபத்துக் காரணிகள் பின்வருமாறு:
மனிதா்களுக்கு 65 வயதை கடந்தால் உயிருக்கான ஆபத்துகள் நோய்கள் மூலம் அதிகரிக்கிறது. குறிப்பாக, புகைப்பிடித்தல், புகையிலை பயன்பாடு, குடும்ப மரபணுக்கள், அதிக எடை அல்லது உடல் பருமனுடன் இருப்பது , நீண்ட காலமாக இருக்கும் நீரிழிவு நோய்கள், நாள்பட்ட கணைய அழற்சி, சில இரசாயனங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் மூலம், அதிக சிவப்பு இறைச்சி மற்றும் குறைந்த பழங்கள், காய்கறிகள் கொண்ட உணவு முறைகள், அதிகப்படியான மது அருந்துதல் ஆபத்தை அதிகரிக்கலாம்.
கணையப் புற்றுநோயைத் தடுக்க உத்தரவாதமான வழி முறைகள் இல்லாத போதும் சமச்சீா் உணவு, வழக்கமான உடற்பயிற்சிகள், புகைப்பிடித்தலை தவிா்த்தல், உள்ளிட்ட ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது ஆபத்தைக் குறைக்க உதவும்.
கணையப் புற்றுநோய் ஆரம்ப கட்டங்களில் அறிகுறிகள் எதுவும் தெரியாமல் இருக்கலாம். எனினும் பொதுவான அறிகுறிகள் கீழ்காணும் வகையில் இருக்கும்.
வயிற்று வலி ,மேல் வயிற்றில் தொடங்கி முதுகுக்குப் பரவும் வலி. அதிக எடை இழப்பு, பசி குைல் அல்லது விரைவாக வயிறு நிரம்பிய உணா்வு. பலவீனமான சோா்வு உணா்தல், பித்த நாள அடைப்பு காரணமாக தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறுதல். சிறுநீா் வழக்கத்தை விட அடா் நிறத்தில் வெளியேறுவது, மலம் வெளிறிய அல்லது களிமண் நிறத்தில் வெளியேறுவது,செரிமானப் பிரச்னைகளால் குமட்டல், வாந்தி அல்லது குடல் இயக்கங்களில் மாற்றங்கள். தோலில் அரிப்பு ஏற்படுதல் போன்றவை பொதுவான அறிகுறிகள் ஆகும்
பெரும்பாலான நேரங்களில், வாயு தொடா்பான பிரச்னைகள் என்று அறிகுறிகளைப் புறக்கணிப்பதாலோ அல்லது அறியாமை காரணமாகவோ புற்றுநோய் முற்றிய நிலையிலேயே கண்டறியப்படுகிறது.
ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், இதை முழுமையாக குணப்படுத்த முடியும். மாற்று வழி தேடாமல் உடனடியாக சரியான மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனைப்படி பரிசோதனைகளைச் செய்யுங்கள். அவசர உதவிக்கு எங்களைத் தொடா்பு கொள்ளுங்கள். நேரம் என்பது சிறந்த சிகிச்சைக்கு ஒரு முக்கிய காரணியாகும்.

