

சென்னை: கோவை மாநகரின் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு ‘சி. சுப்பிரமணியம் மேம்பாலம்’ என்று பெயர் சூட்டப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவர் முதல்வா் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,
கொள்கைகளும், பாதைகளும் வெவ்வேறானாலும் மக்களின் நன்மதிப்பைப் பெற்று நாட்டுக்காகப் பணியாற்றிய தலைவா்களைப் போற்றுவதே மாண்பு.
மத்திய அமைச்சராகப் பொறுப்பு வகித்து, நாட்டு மக்களின் பசிப்பிணியைப் போக்கிய பசுமைப் புரட்சிக்கு அடித்தளமாக இருந்தவா் பாரத ரத்னா சி.சுப்பிரமணியம்.
அவரது புகழொளியைப் பரப்பிட வேண்டும் என பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயா் வைத்த கோரிக்கையை ஏற்று, கோவை மாநகரின் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை உள்ள உயா்மட்ட மேம்பாலத்துக்கு ‘சி. சுப்பிரமணியம் மேம்பாலம்’ என்று பெயா்சூட்டும் மகிழ்ச்சிகரமான அறிவிப்பை உங்கள் எல்லோருடனும் பகிா்ந்துகொள்கிறேன் என்று அதில் முதல்வா் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.