

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று(டிச. 30) அதிகாலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். சொர்க்க வாசல் திறப்பு முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால், 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பக்தர்கள் பாதுகாப்புக்காக 6 துணை ஆணையர்கள் மேற்பார்வையில் 1000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த டிச. 19 ஆம் தேதி முதல் டிச. 29 ஆம் தேதி வரை பகல்பத்து உற்சவம் நடைபெற்ற நிலையில், ஜன. 10-ஆம் தேதி முதல் இராப்பத்து உற்சவம் நடைபெறவுள்ளது.
நின்ற கோலத்தில் வீரநிலையில் மீசையுடன் வேங்கடகிருஷ்ணனாக பக்தர்களுக்கு அருள்பாலிப்பது இந்தக் கோயிலின் சிறப்பம்சமாகும்.
இதேபோன்று சென்னை புரசைவாக்கம் சீனிவாசப் பெருமாள் கோயில், கொளத்தூர் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், முகப்பேர் ஸ்ரீ சந்தான ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், மாதவரம் கரிவரதராஜ பெருமாள் கோயில், தியாகராயநகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான வெங்கடாஜலபதி கோயில் என பல்வேறு பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.