முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா காலமானார்
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா(79) சனிக்கிழமை காலமானார். இதனை முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி தெரிவித்துள்ளார்.


புதுதில்லி: முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா(79) சனிக்கிழமை காலமானார். இதனை முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி தெரிவித்துள்ளார்.
சாவ்லா மூளை அறுவை சிகிச்சைக்காக தில்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், மாரைப்பு காரணமாக அவர் சனிக்கிழமை உயிரிழந்தார். அவரது உடல் இன்று(பிப்.1) மாலை 5 மணிக்கு தில்லி கிரீன் பார்க் மயானத்தில் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து எஸ்.ஒய். குரேஷி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: நாட்டின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா மறைவு குறித்து அறிந்து வருந்தம் அடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என கூறியுள்ளார்.
உடல்நலம் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக அவர் தெரிவித்தபோது, சுமார் 10 நாட்களுக்கு முன்பு சந்தித்ததாகவும், அப்போது அவர் மகிழ்ச்சியாக இருந்ததாக குரேஷி தெரிவித்தார்.
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரான சாவ்லா, 2005 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். ஏப்ரல் 2009 இல் 16 ஆவது தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். ஜூலை 2010 வரை தலைமைத் தேர்தல் ஆணையராகவும் இருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...